வாரிசில் பட்டதே போதும் மீண்டும் இப்படி ஒரு தப்பை செய்யவே மாட்டேன்.. தளபதி 67 ரீலீஸ் தேதி இதுதான்.!

0
vijay
vijay

தமிழ் திரை உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவான வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், உலகம் முழுவதிலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. அதை கொண்டாடும் வகையில் வாரிசு படக்குழு ஹைதராபாத்தில் ஒரு  நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடியது.

அதில் விஜய், ஷாம், தில் ராஜு, வம்சி மற்றும் படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்  இளம் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு உருவாகுவதாக தகவல்கள் வெளி வருகின்றன இருப்பினும் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு வெளியிடாமல் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. ஆனால் ஒரு சில பெயர்கள் அடிபட்டுள்ளன அந்த வகையில் விஜயுடன் கைகோர்த்து மன்சூர் அலி கான், கௌதம் மேனன், சஞ்சய் தத்..

மற்றும் பிக்பாஸ் பிரபலமான ஜனனியும் இந்த படத்தில் நடிக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தளபதி 67 திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி பார்க்கையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு..

படத்தை ரிலீஸ் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விஷயத்தை அறிந்த ரசிகர்கள் அஜித்துக்கு பயந்து தான் ரிலீஸ் தேதி மாறுகிறதா? என கேட்டு வருகின்றனர்.