பொன்னியின் செல்வன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் இதுதான்.! அருள்மொழிவர்மன், கரிகாலன் கிடையாது.?

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் காண பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தை இயக்க இயக்குனர் மணிரத்தினம் பல வருடங்களாக ஆசைப்பட்டு வந்தார் அதுவும் இரண்டு முறை முயற்சி செய்து தோல்வி அடைந்ததை எடுத்து மூன்றாவது முறை தான் அவரது கனவு நினைவாகியுள்ளது.

படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம டிரண்ட் ஆகியது. படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளதால் அதிக நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

அந்த வகையில் இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு விழாவின் போது நடிகர் ரஜினி பொன்னியின் செல்வன் படம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியது கல்கி புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். அதில் மிகவும் பிடித்தது பொன்னியின் செல்வன் கதை என கூறினார்.  மேலும் பேசிய ரஜினி இந்த படத்தின் கதையை படமாக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்தே முயற்சி செய்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது தான் நனவாகி உள்ளது. இந்த கதையை மணிரத்தினம் படமாக்கி வெற்றியை கண்டுள்ளார். மேலும் பேசிய ரஜினி பொன்னியன் செல்வன் படத்தின் கதையில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன அதில் எனக்கு பிடித்தது நந்தினி கதாபாத்திரம் என கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் படமாக்கப்பட்டதில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

Leave a Comment