ஷாலினி, ஷாமினியின் அப்பாவா இவர்.! இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதலில் தமிழக அளவிலான தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தல அஜித் பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பமாட்டார். ஆனால் தனது சொந்த வாழ்க்கையில் மிகுந்த அக்கறையாக இருப்பார். தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் அதிகாரம் காட்டுவார்.

இந்நிலையில் தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.  அஜித்தின் மச்சினிச்சி தான் நடிகை ஷாமிலி. ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அஞ்சலி திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து பல விருதுகளையும் பெற்றார்.

ஷாலினி சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இதுவரையிலும் ஷாலினி மற்றும் ஷாமிலியின் அப்பாவும் தல அஜித்தின் மாமனாரையும் இதுவரையிலும் நாம் பார்த்ததே இல்லை. இதோ அவரின் புகைப்படம்.

shamili and shavani
shamili and shavani
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment