பிரேமம் பட நடிகர் நிவின் பாலியா இது.? பப்ளிமாஸ் போல் மாறிட்டாரே…புகைப்படத்தைப் பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

மக்கள் மத்தியில் பிரபலமடைய சினிமா பிரபலங்கள் பலரும் தனது உடம்பை சிலிம்மாக வைத்தி கொள்வதோடு மட்டுமல்லாமல் செம அழகாக தெரிவதற்காக மேக்கப் எல்லாம் போட்டு வலம் வருவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகர்கள் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது  எந்த கதாபாத்தில் இருக்கிறார்களோ அதே போல  சிலநாள் நிஜ வாழ்க்கையிலும் சுற்றி தெரிவார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் நடிகர்கள் அப்படி இருந்தது உண்டு  அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங்கின் போது என்ன கெட்டப்பில் இருந்தாரோ அதேபோல் நிஜவாழ்க்கையில் சுற்றித்திரிதார். சசிகுமார், விக்ரம், கமல் போன்றவர்கள் அதே சாயலில் தான் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் அதேபோல தற்போது சுற்றித்திரிந்து வருவர் தான் மலையாள நடிகர் நிவின் பாலி.

இவர் முதலில் பிரேமம் படத்தில் நடித்த ஹீரோவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் முதல் படமே சூப்பர்ஹிட் படமாக அமைந்ததால் மலையாள சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பிரபலமடைந்த இவரைப் போலவே இந்த படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன், சாய்பல்லவி போன்ற மூன்று நடிகைகளும் பிரபலம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன் பாலி இந்த திரைப்படத்தை தொடர்ந்து நேரம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகிலும் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து ஓடிக்கொண்டிருந்த நிவின் பாலி தற்போது கைவசம் மூன்று நான்கு படங்களை வைத்துள்ளார் அதில் ஒரு படம் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

nivin pauli
nivin pauli

தமிழில் கற்றது, தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களை இயக்கிய ராம் தான் தற்பொழுது நிவின் பாலியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நிவின் பாலி உடல் எடை அதிகரித்து பப்ளிமாஸ் போல் மாறி உள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகி உள்ளனர். இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment