அட நம்ம ஜிபி முத்துவா இது.? என்ன ஸ்டைலா இருக்காருயா.. புகைப்படத்தை பார்த்து மெய் சிலிர்க்கும் ரசிகர்கள்…

தற்போது சினிமாவில் பல நடிகர் மற்றும் நடிகைகள் டிக் டாக் மற்றும் யூட்யூப் செயலிகள் மூலம் எப்படியோ சினிமாவில் ஒரு வாய்ப்பைப் பிடித்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் பல நடிகர் நடிகைகள் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரம் பிடிக்க முடியாமல் போய் தற்போது பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார்கள் அதே போல சினிமாவில் நல்ல நிலைமையிலும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமாகி youtube இல் சொந்தமாக ஒரு சேனலை ஓபன் செய்து அதில் பல வீடியோக்களை வெளியீட்டு பல லட்ச ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நமது அண்ணன் ஜி பி முத்து அவர்கள்தான்.

இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இறுதி வரைக்கும் நின்று முதல் பரிசை தட்டிச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் தானாகவே முன்வந்து பிக் பாஸ்லிருந்து வெளியேறினார் ஜி பி முத்து. தனது மகன்களை பார்க்க வேண்டும் என்று கூறி அவர் பிக் பாஸ் விட்டு வெளியேரி இருக்கிறார் ஆனால் கமல் அவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் தனது மகனுக்காக பிக் பாஸில் இருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஐ தொடர்ந்து அடுத்ததாக ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜி பி முத்து இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் ஜி பி முத்து அவர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் குக் வித் கோமாளி ஷோவ்க்காக ஹாலிவுட் கதாபாத்திரமான தோர் போல கெட்டப் போட்டுக்கொண்டு அதில் அவர் அடையாளம் தெரியாத வகையில் இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதோ ஜி பி முத்துவின் அட்டகாசமான புகைப்படம்…

gb muthu
gb muthu

Leave a Comment