சினிமா உலகில் எனக்கு இருக்கும் “நண்பன்” இவர்தான்..! பேட்டியில் வெளிப்படையாக சொன்ன நடிகர் தனுஷ்.!

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் இதுவரை நடிகர் தனுஷ் பொல்லாதவன், அசுரன், ஆடுகளம், கர்ணன், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இந்த படங்களின் மூலம் தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டுள்ளார் அண்மைக்காலமாக நடிகர் தனுஷின் நடிப்பு நாளுக்கு நாள் சூப்பராக இருந்து வருகிறது அதன் காரணமாகவோ என்னவோ தமிழை தாண்டி இவருக்கு பாலிவுட் ஹாலிவுட் போன்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இதனால் அவரது சினிமா பயணமும் புதிய உச்சத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது தற்பொழுது நடிகர் தனுஷ் ஒரு படத்திற்கு சுமார் 20 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷ் பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது வெற்றிமாறன் என்னுடைய தோஸ்து. நான் நம்பும் நான்கு நபர்களில் ஒருவர் வெற்றிமாறன் மீதி மூன்று பெண்கள் மொத்தம் நாலு பேர் தான் நான் ரொம்ப நம்புவேன் என கூறி உள்ளார். தனுஷை போலவே தான் வெற்றி மாறனும் இருவரும் இப்பொழுதும்  நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

dhanush and vetrimaran
dhanush and vetrimaran

அடுத்தடுத்த படங்களில் இணைய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் தனுஷும் வெற்றி மாறனும் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் இணைந்துள்ளனர் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது சொல்லப்போனால் இது ஒரு வெற்றி கூட்டணி தான்.

Leave a Comment