என்னுடைய ட்ரீம் புகைப்படம் இதுதான் – முக்கிய சினிமா பிரபலத்துடன் போட்டோ எடுத்துக் கொண்ட மோகன் ஜி..! நீங்களே பாருங்கள்.

0
mohan ji
mohan ji

அண்மைக்காலமாக இளம் இயக்குனர்கள் வித்தியாசமான மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து அசத்துகின்றனர் அந்த வகையில் மோகன் ஜி தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் சமூக அக்கறை உள்ள படங்களாக இருந்தது. இந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை மோகன் ஜி திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாகசுவரன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடிக்கிறார்.

இந்த படம் சமூக அக்கறை உள்ள ஒரு கருத்துக்களை எடுத்துரைத்து  இருந்தாலும் வித்தியாசமான ஒரு திரைப்படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது இந்த படமும் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என சொல்லப்படுகிறது. செல்வராகவன் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதுபோல செல்வராகவன் தற்போது நடிக்கும் திரைப்படங்களும் வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன செல்வராகவன் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது தனது தம்பியை வைத்து உருவாக்கி வரும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி அதில் வில்லனாக கூட இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தாண்டி நடிப்பிலும் தற்பொழுது செம கெத்து காட்டுவதால் செல்வராகவனின் சினிமா மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் மோகன்ஜிவுடன் செல்வராகவன் இணைந்து செல்பி புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டார் இதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மோகன் ஜி இது என்னுடைய ட்ரீம் செல்ஃபி என குறிப்பிட்டு புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..