“மைனா” படத்தில் அமலாபாலுக்கு அம்மாவாக நடிக்கும் போது என்னுடைய வயது இதுதான்- ஷாக் கொடுத்த நடிகை.!

சினிமா உலகில் திறமையை காட்டும் நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதுமே வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் அந்த வகையில் இளம் வயதிலேயே குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் பூவிதா. இவர் தமிழில் 35  படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இவரது நடிப்பு பெரிய அளவு படங்களில் பேசப்பட்டு இருந்தாலும் இவரை ரசிகர்கள் ஞாபகம் வைத்திருக்காமல் போய்விட்டனர் என்பதுதான் சற்று கவலையை கொடுக்கிறது.

இவருக்கு வயது கம்மி என்றாலும் சினிமா அனுபவம் அதிகம் அதேசமயம் இவர் நடித்துள்ள கதாபாத்திரங்களும் பெரிய பெரிய கதாபாத்திரங்கள் தான்  அந்த வகையில் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பரமாவிற்கு அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதனைத் தொடர்ந்து மைனா படத்தில் நடிகை அமலா பாலுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

உண்மையில் மைனா படத்தில் நடிக்கும் பொழுது நடிகை பூவிதாவுக்கு வயது 22 ஆனால் அந்த படத்தில் நடிகை அமலா பாலுக்கு அம்மாவாக அவர் நடிக்க கேட்டுள்ளனர் அமலா பாலுக்கும் இவருக்கும் ஒரே வயது என்றாலும் அந்த கதாபாத்திரத்தில் பூவிதா நடிக்க ஒப்பு கொண்டார். சும்மா சொல்ல கூடாது அந்த காட்சியில் சூப்பராக நடித்து மிரட்டினார்.

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் முதலில் நடிக்க பயந்தேன் பிறகு தனக்கான காட்சி இதுதான். நான் இப்படித்தான் நடிக்க போகிறேன் என முடிவு செய்து துணிந்து நடித்தேன் இந்த படத்தில் ஒரு காட்சியில் அருவாளை எடுத்து சுற்றுவது போல் ஒரு காட்சி வரும் அந்த காட்சியில் நான் நடித்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு காலில் அடிபட்டு விட்டது.

அதையும் தாண்டி அந்த சீன் நன்றாக போய்க் கொண்டிருந்ததால் அந்த வலியை பொறுத்துக் கொண்டு நடித்தேன். அதன் பிறகு வாகை சூடவா படத்தில் சூளையில் வேலை பார்க்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்தேன் என கூறினார். கிராமத்திய கதைகள் என்றால் புவிதாவை பலருக்கும் ஞாபகம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது அந்த அளவிற்கு குண சித்திர கதாபாத்திரங்களில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.

Leave a Comment