மஞ்சள் உடையில் விளையாடுவது இதுதான் கடைசி போட்டியா தோனியிடம் கேட்ட கேள்வி.! தோனி அதிரடி பதில்

sathish tweet about dhoni viral: இன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி கொள்கின்றன. மேலும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஒரு தொகுப்பாளர் தோனியிடம் மஞ்சள் உடையில் விளையாடுவது இந்த போட்டி தான் உங்களுக்கு கடைசி போட்டியா என்ற கேள்வியை எழுப்பினார்.

இதற்கு தோனி அவர்கள் definitely not  என உறுதியாக பதிலளித்தார். இந்த பதிலில் இருந்து அடுத்த ஆண்டும் தோனி அவர்கள் சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்று விளையாடுவார் என உறுதி செய்யப்பட்டது.

எனவே இந்த definetly not என்ற பதில் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்தநிலையில் காமெடி நடிகர் சதீஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் definitely not என்பது தரமான வார்த்தை என கூறியுள்ளார்.

தற்போது இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment