இதுதான் கடைசி வாய்ப்பு..! சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு நிறைவேறுமா.?

0

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த ஐபிஎல் தொடரில் 41வது போட்டி இன்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் நேரடியாக மோத இருக்கின்றன.

சென்னை அணி இந்த வருட ஐபிஎல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது, இதுவரை சென்னை அணி ஆடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, ஐபிஎல் போட்டியில் இதுவரை சென்னை அணி இந்த அளவு மோசமாக விளையாடியது கிடையாது.

இந்த நிலையில் இன்றைய போட்டி சென்னை அணிக்கு வாழ்வா அல்லது சாவா என்று நிர்பந்தத்தில் இருக்கிறது, அதேபோல் மும்பை அணி 9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது, ஆனால் சென்னை அணி புள்ளிவிவரப்படி கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு மும்பை அணி சிஎஸ்கே அணியுடன் மோதியபோது மும்பை அணி தோல்வியடைந்தது அதனால் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்துவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்.. அதேபோல் சென்னை அணி இன்று  வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிபந்தனையில் இருப்பதால் அவர்களும் அடித்து நொறுக்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணி மீதமிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா அல்லது மும்பை அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.