இப்படிதான் சம்பவம் செய்தோம்.! வீடியோவை வெளியிட்டு அதகலப்படுத்தும் அனிருத்…

தமிழ் சினிமாவில் ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத் அவர்கள் தற்போது லியோ மற்றும் ஜெயிலர் ஆகிய இரண்டு திரைப்படத்திற்கும் ஒரே நேரத்தில் இசையமைத்து வருகிறார். பொதுவாகவே இவருடைய இசைக்காக பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம், திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் அதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனராஜ் மற்றும் அனைவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். சமீப காலங்களாக விஜய் நடித்துவரும் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்த நிலை இந்த படத்தில் யாரெல்லாம் நடிகர்கள் மற்றும் இந்த படத்தின் டைட்டில் பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த வகையில் லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது பட குழு. இதனை தொடர்ந்து அடுத்த மறு நாளே இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோவை பட குழு வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கு லியோ என்ற டைட்டிலாக வைத்து ஒரு பிரமோ வெளியானது இந்த பிரமோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது படபிடிப்பு தளத்திலிருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது லியோ படத்தின் டைட்டில் பிரமோ மேக்கிங் வீடியோவை அனிருத் அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்திற்காக தீயாய் வேலை செய்கிறார் அனிருத் என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment