ஆரி பிக்பாஸில் இப்படிதான் ஜெயித்தார் மற்றும் அனிதா சம்பதை பற்றியும் ஆடியோவை வெளியிட்ட ரவீந்திரன்.! கடும் கோவத்தில் ஆரி ரசிகர்கள்.!

0

பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் ஐந்தாவது சீசனில் வேறு ஒரு புதிய நடிகர் தொகுப்பாளராக அறிமுகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதை தொடர்ந்து பலருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் இந்நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நிறைவுப்பெற்றது.

அந்த வகையில் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி வெற்றி பெற்றார். பாலாஜி முருகதாஸ்  இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்நிகழ்ச்சி நடைபெற்று முடிந்து சில மாதங்கள் ஆன பிறகும் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மாற்றி மாற்றி  திட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதிலும் அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ்,சனம் செட்டி இவர்கள் மூவரும் தான் சோசியல் மீடியாவில் பல கருத்துக்களையும் கூறி சண்டை போட்டுக் கொண்டு வருகிறார்கள். இவர்களைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நண்பர்களாக மாறி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஆரியைப் பற்றி பல கருத்துகளை அனிதா சம்பத் கூறி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனைத் தாண்டி  அனிதா சம்பத் மற்றும் ஆரி இருவரும் உண்மையான நண்பர்களாகவே பழகி வருகிறார்கள்.

anitha sampath
anitha sampath

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தயாரிப்பாளர் ரவீந்திரன் தனது யூடியூப் சேனலில் அனிதா சம்பத் பற்றியும் ஆரியை பற்றியும் பேசி  அவ்வபொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ஆரியை பற்றி பேசும் பொழுது இவரால் தான் ஆரின் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் என்பது போலவே பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரி உங்களால் வெற்றியடையவில்லை அவரது உண்மையான முகத்தால் தான் வெற்றி அடைந்தார் என கூறிவருகின்றனர்.