தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பின்னால் அலைய வைத்தவர்தான் நடிகை அனுஷ்கா இவர் தமிழில் சிங்கம், தெய்வத்திருமகன், என்னை அறிந்தால், பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகம் ஆகியவற்றில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழியை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இவருடைய மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தியது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை அதிகரிக்க வேண்டி ஆயிற்று ஆகையால் பார்ப்பதற்கு வயதான தோற்றம் போல மாறிய அனுஷ்கா அதன் பிறகு பழைய நிலைமைக்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார்.
ஆனால் எந்த முயற்சியும் பலமின்றி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று தன்னுடைய அழகை மீண்டும் பெற்றெடுத்த அனுஷ்கா பெற்றோர்கள் இனிமேல் விட்டால் அவ்வளவுதான் என அவருக்கு தீவிரமாக திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் தன்னுடைய பெற்றோர்களிடம் நடிகை அனுஷ்கா ஒரே ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். அந்த வகையில் தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் மிகப்பெரிய பணக்காரராக இல்லாவிட்டாலும் தன்னுடைய உயரத்திற்கு ஏற்ப 6 அடி உயரம் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.