மீதி இருக்குற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் இப்படி தான் விளையாடும்.! அடித்து சொல்லு வீரர்.. சொன்னது யார் தெரியுமா.?

0

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்றார் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் இருவரும் களத்தில் இறங்கினர்.

பஞ்சாப் பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வீசி தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைய கொலைய செய்தனர் தொடக்கத்திலேயே குயின்டன் டி காக் அவுட்டாக அடுத்த வீரர் நிதானமான ஆட்டத்தை ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் தொடர்ந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியை காட்ட தொடங்கும்போது இஷன் கிஷன்னும் அவுட் ஆனதால் சூரியகுமார் மற்றும் ரோகித் சர்மாவும் தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓரளவு இலக்கை நோக்கி ஓடினர்.

ஆனால் கடைசி 6 ஓவர்களில் தொடர் விக்கெட்டுகளை இழந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி 131ரன்களை எடுத்திருந்தது அதன் பிறகு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிட்சின் தன்மைக்கு ஏற்றவாறு நிதானமாக ஆடி வெற்றியை 17 ஓவரிலேயே ருசித்தனர்.

மேட்ச் முடிந்த பிறகு சூர்யகுமார் யாதவ் பேட்டி கொடுத்தார் அப்பொழுது அவர் இந்த போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை ஆனால் மீதி இருக்கிற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 100 சதவீத வலிமையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.