“மாவீரன்” பட வாய்ப்பு அதிதி சங்கருக்கு இப்படி தான் கிடைத்தது.? ரகசியத்தை உடைத்த பயில்வான்

0
aditi-shankar
aditi-shankar

சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.  அதிலேயும் எடுத்த உடனேயே புதுமுக நடிகைகள் படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பேரையும் புகழையும் அடைகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின்..

இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு, நடனம் போன்றவை சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் அதிகம் உருவாகினர். மேலும் திரையுலகில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன்  என்னும் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார் இந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில் அவருடைய மார்க்கெட் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் படத்தில் நடிக்க நடிகை அதிதி ஷங்கருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் சொன்னது என்னவென்றால்.. அதாவது நடிகை அதிதி ஷங்கரும், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் தான் மாவீரன் படத்தில் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று தெரிவித்துள்ளார்.

அதிதி ஷங்கர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிக்க மாட்டேன் என சொன்னார். இதையெல்லாம் வைத்து யோசித்துப் பார்த்தால் ஒருவேளை பயில்வான் ரங்கநாதன் சொல்வது உண்மையாக இருக்குமோ என யோசிக்க ஆரம்பிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.