வாவ் செம ஸ்மார்ட் அஜித் 61 திரைப்படத்தில் அஜித்தின் லுக் இதுதானா.! வேற லெவலில் மிரட்டுகிறாரே

அஜித் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் செம ஹாண்ட்சமாக இளமையுடன் இருக்கிறார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் அடித்து நொறுக்கி வருகிறது. ஒருவேளை அஜித் 61 திரைப்படத்தின் லுக் ஆக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் அஜித் h வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்துள்ளார் இந்த திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒரு சிலரிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது ஆனால் இந்த கலவையான விமர்சனங்கள் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாக்கிய வலிமை திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் குமார்.

இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்க இருக்கும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் அண்ணா சாலை  செட் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஹீரோவும் அஜித்தான் வில்லனும் அதுதான் என படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை உருவாக இருக்கிறதாம். மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் கேரக்ட்டர்களில் வித்தியாசம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வில்லன் அஜித் வெள்ளை தாடியுடன் காதில் கடுக்கன் அணிந்து கொண்டு செம ஸ்டைலிஷாக மாறியுள்ளார் அஜித்.

அதுமட்டுமில்லாமல் இந்த அஜித் 61 திரைப்படத்திற்காக அஜித் 25 கிலோ எடையை அதிரடியாகக் குறைக்க இருப்பதாகவும் இதில் 10 கிலோ ஏற்கனவே குறைந்து விட்டதாகவும் இன்னும் 15 கிலோ விரைவில் குறைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது வில்லன் கதாபாத்திரத்திற்காக இடையில் வயதான தோட்டத்திலும் எடையை குறைத்த பிறகு ஹீரோ நூலுக்காக எடையை குறைத்து இளமையான தோற்றத்திலும் அஜித் மாறப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ப அஜித் தானா என வியந்து பார்க்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஒரு தீவிர ரசிகர் ஒருவர் பத்து வருடத்திற்கு முன்பு அஜீத்தை பார்த்தது போல் இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளார்.

ajith new look
ajith new look

Leave a Comment