அஜித் மகளா இது.? ஹீரோயின் போல் ஜொலிக்கிறாரே.. லேட்டஸ்ட் கிளிக்.!

0
ajith
ajith

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்தவகையில் விசுவாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மற்றொரு ஹிட் படத்தை கொடுக்க ஹச். வினோத் உடன் மீண்டும் ஒரு முறை இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

ஹச். வினோத் இந்த படத்தின் கதையை சொன்ன உடனேயே நடிகர் அஜித்குமார் உடல் எடையை சுமார் 15 இலிருந்து 20 கிலோ குறைத்து இந்த படத்திற்காக புதிய லுக்கில் சூப்பராக இருக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் கை கொடுத்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா மற்றும் பல நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 நாட்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது மேலும் அஜித் இரவு பகல் பார்க்காமல் நடித்து வருவதாக அண்மையில் போனிகபூர் தெரிவித்தார் மேலும் AK 61 படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் எனவும்.

வலிமை படம் போல் அஜித்தின் 61படம் இருக்காது எனவும் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் இரவு நேரத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித்தின்  மகள் அனோஷ்கா ஹீரோயின் போல் மாறி விட்டார் எனக் கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.