Ak-61 திரைப் படத்தில் அஜீத்தின் கெட்டப் இதுதான்.! சத்தமே இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட அஜீத்தின் மேனேஜர்.!

ajith 61 movie
ajith 61 movie

தல அஜித் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை h வினோத் அவர்கள் தான் இயக்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் நேற்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித் 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது திரைப்படத்திற்காக சென்னை அண்ணா சாலை போன்ற பிரம்மாண்டமான செட் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.  அதாவது அஜீத்தின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் 61 திரைப்படத்தில் அஜீத்தின் கெட்டப்பை புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அஜித் நீண்ட முடியுடன்  நீண்ட தாடி வைத்துக்கொண்டு அட்டகாசமாக இருக்கிறார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் அஜித் 61 திரைப்படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தையும் போனிக் கபூர் தயாரிக்க இருக்கிறார் எனவும் தகவல் வெளியானது. அஜித் 61 திரைப்படம் சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து  கதை உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தில் நீண்ட உரையாடல்கள் இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.