குழந்தை பெற்ற பின் செம்ம நச்சின்னு இருக்க இந்த ஒர்க்அவுட் தான் காரணம்.! அவரே வெளியிட்ட வீடியோ.

0

serial actress alya manasa workout video:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பொதுவாக குடும்பத்தை மையப்படுத்தி நல்ல கதை உள்ள தரமான சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இந்த சீரியலில் செம்பா என்ற கேரக்டரில் நடித்தவர்தான் ஆலியா மானசா, கௌதம் கார்த்திக் கேரக்டரில் சஞ்சீவ் நடித்துவர். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவரும் காதல் வயப்பட்டதால் கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் தற்போது இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது சஞ்சு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் காற்றின் மொழி என்ற வித்தியாசமான கதை உள்ள சீரியலை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஆலியா மானசாவும் தற்பொழுது ஒரு சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சில நாட்கள் முன்பு கூட ஷூட்டிங் நடக்கும்போது ஒரு அழகான புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் குழந்தை பிறந்து சில மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் ஆலியா நடனமாடும் வீடியோக்களையும், டப்ஸ்மேட்ச் செய்யும் வீடியோவையும், தனது அழகிய புகைப்படங்களையும், இவர்களின் குழந்தையின் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவர்களின் குழந்தையின் பெயர் அய்லான்.

அந்த வகையில் தற்போது ஆலியா மானசா குழந்தை பிறந்த பிறகு எப்படி உடல் எடையை குறைத்தேன் என்று என்று கூறி ஆலியா ஹார்டு வொர்க் செய்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.