உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இந்த ஒரு வீரர் தான்.! 200ரன்களை அடிப்பார்.! அடித்து கூறும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்.! அது கோலி இல்லிங்க..

0
ind-vs-nz
ind-vs-nz

கிரிக்கெட் உலகில் இதுவரை பல போட்டிகளை நாம் பார்த்துள்ளோம் ஆனால் இதுவரை சந்திக்காத போட்டியாக கருதப்படுவது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இது முதல் முறையாக நடக்க உள்ளதால் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் காத்து கிடக்கின்றனர்.

இது குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் அதிலும் முன்னாள் வீரர்கள் இதில் யார் பலம் வாய்ந்த அணியாக இருப்பார்கள் யார் அதிக விக்கெட்டுகளை விழ்த்துவார்கள், யார் அதிக ரன்களை அடிப்பார்கள் என்பதை தற்போது பட்டியலிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா சமீபத்திய பேட்டி இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்துஅவர் பேசி உள்ளார் அவர் கூறியது.

இந்த இறுதி தொடரில் இந்திய அணி தொடக்க வீரரான ரோகித் சர்மா நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதத்தை அடிக்க முடியும் என தெரிவித்துள்ளார் விராட் கோலியை விட ரோகித் சர்மாவுக்கு டெக்னிக்கலான வீரர் கோலி சூப்பர் ஸ்டார் வீரர் தான் ஆனாலும் அவரை விட ரோகித் சர்மா மிகப் பெரிய இன்னிங்ஸ் ஆடும் திறமை  அவரிடத்தில் உள்ளது.

rohit and kohli
rohit and kohli

குறிப்பாக இறுதி போட்டி மற்றும் முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமை ரோஹித்துக்கு அதிகம் உண்டு அப்படிப் பார்த்தால் இந்த போட்டியும் மிக முக்கியமான ஒரு போட்டி அதனால் ரோகித் சர்மா டபுள் செஞ்சுரி அடிக்க மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இருக்கிறது எனவே சவுத்தாம்ப்டன் நகரில் நிச்சயம் ரோகித் சர்மா 200 ரன்களை அடிப்பார் என அடித்துக் கூறியுள்ளார்.