சினிமா உலகில் ஹீரோவாக தொடர இந்த ஒரு படம் தான் இருக்கு.! புலம்பும் விஜய் சேதுபதி.

0

திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தனது நடிப்புத் திறமையினாலும், கடின உழைப்பினாலும் தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து திரையுலகில் கிடுகிடுவென வளர்ந்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரும் வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கேரக்டரிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு வெற்றி படங்களை மட்டுமே தந்து கொண்டிருந்த விஜய்சேதுபதிக்கு தற்போது எந்த ஒரு படமும் வெற்றியை கொடுக்காமல் மாறாக தோல்வி அடைந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது உள்ள பல இயக்குனர்கள் விஜய் சேதுபதியை வைத்து படம் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறார்கள்.

இவ்வாறு கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள விஜய்சேதுபதி. இந்த நிலையில் க /பே ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் எப்படியும் நல்ல வெற்றி பெற்று வசூல் வேட்டையை செய்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

இப்படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து வந்தார்ஆனால் தற்போது லாக் டவுன் நீடித்துக் கொண்டே போவதால் OTT யில் வெளியாகும் என்று படக்குழுவினர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே விஜய் சேதுபதி தனது ஹீரோ கேரக்டரை ரசிகர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்வதற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். இப்படத்திற்காக விஜய் சேதுபதியின் ரசிகர்களும் ஆவலாக காத்து வருகிறார்கள்.