நடிகர் கார்த்தியிடம் இருக்கும் இந்த பழக்கம் அவரை மிகப்பெரிய ஒரு உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் – நடிகர் நெப்போலியன் பேட்டி.!

karthi-
karthi-

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி அதன்பின் தமிழ் சினிமாவில் தனது திறமையை காட்டும் படி அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று நன்றாகவே வசூல் வேட்டையை நடத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் கார்த்தியின் ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன் கார்த்தி குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

நான் இதுவரையிலும் பல நடிகர்களுடன் நடித்து உள்ளேன் ஆனால் எந்த ஒரு நடிகரிடம் இல்லாத பண்பு நடிகர் கார்த்தி இடம் இருப்பதாக கூறினார் அவர் மேலும் சொன்னது கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்தேன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து நான் ஹோட்டலில் இருந்து வெளியே..

செல்ல ரெடியாக இருந்தேன் அப்பொழுது நடிகர் கார்த்தி ஹோட்டலுக்கு காரில் வந்தார் என்னை சந்தித்து சுல்தான் படத்தில் எங்களுடன் நடித்ததற்கு மிக்க நன்றி என தெரிவித்தார் என்னை ஊருக்கு வழி அனுப்பி வைத்தார் இதுவரை எந்த ஒரு நடிகரும் இப்படி நான் பார்த்ததே கிடையாது நடிகர் கார்த்தி மிக நேர்மையாகவும் பணிவுடனும் இருந்தார் என கூறி அசத்தினார்.