இந்த பையன் தான் அடுத்த சிவகார்த்திகேயன் – குக் வித் கோமாளி செட்டில் அதிரடியாக பேசிய நடிகர் பார்த்திபன்.!

0
parthipan
parthipan

விஜய் டிவியில் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி காமெடி நிகழ்ச்சியை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறது. தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனை ரக்க்ஷன் தொகுத்து வழங்கிய வருகிறார் மேலும் மூன்று சீசன்களாக ஜட்ஜ் ஆக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்ற நிலையில் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை போன்ற பலரும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

இந்த கோமாளிகள் வாரம் ஒவ்வொரு புதிய கெட்டப்பில் வந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகின்றன இந்த நிலையில் கடந்த எபிசோடில் இரவின் நிழல் படத்தின் பிரமோஷன்காக நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை பிரிகிடா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அப்போது படத்தைப் பற்றி சில விஷயங்களை பார்த்திபன் கூறி வந்தார் ஒரே ஷாட்டில் மொத்த படத்தையும் non linear ஆக எடுத்திருப்பதாக கூறினார். அப்போது பேசிய தொகுப்பாளர் ரக்சன் இந்த படத்தில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சான்ஸ் கிடைக்காதா என படத்தின் ஆடிசனுக்கு சென்று இருந்தேன்.

rakshan
rakshan

இதைக் கேட்ட பார்த்திபன் நீங்கள் தனியாக படம் பண்ணுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இதனால் அடுத்த சிவகார்த்திகேயன் நீங்கள் தான் என கூறினார் இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.