இந்த உணவை மறந்தும் சாப்பிடாதீர்கள்.! கோமாவுக்கே சென்று விடுவீர்கள் இல்லை மரணம் கூட நிகழலாம்.!

0
padam
padam

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று உயிர் வாழ மிகவும் முக்கியமானது உணவு தான்.

மனிதன் உயிர்வாழ உயிர்நாடியாக இருக்கும் உணவில் விஷம் உள்ளது என்றால் அதிர்ச்சியான விஷயம்தான் அதிலும் சில உணவுகளை உண்டால் கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அவை எந்தெந்த உணவு என்பதை இங்கே காணலாம்.

மரவள்ளி கிழங்கு : மரவள்ளி கிழங்கின் இலைகளில் அதிக சைனட் (cyanide) தன்மை உள்ளது. ஆதலால் இவற்றை நீக்கிவிட்டு சமையலில் பயன்படுத்தினால் நலம் தரும். இல்லையேல் பல உடல் உபாதைகள் ஏற்படுத்தி மரணத்தை கூட தரலாம்.

மிளகாய் : மிளகாயை அதிக உணவில் சேர்த்து கொண்டால் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் குடலில் புண்கள் வரவும் வாய்ப்புகள் உள்ளது.

முந்திரி : முந்திரியை பச்சையாக சாப்பிட்டால் விஷமாக கருதப்படும். இதில் உள்ள உருஷியோல் (urushiol) உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

தேன் : அதிக நாட்கள் கெடாத உணவு பொருட்களில் ஒன்று தேன்தான். பதப்படுத்தப்படாத தேனை சாப்பிட்டால் பல உடல் உபாதைகள் வரக்கூடும். பதப்படுத்தாத தேனில், கிரெய்னோடோக்ஸின் (grayanotoxin) உள்ளது. எனவே இது உடலில் திடீர் சோர்வு, அதிக வியர்வை, மன குழப்பங்களை ஏற்படுத்தும்.

ஆப்பிள் : ஆரோக்கியமான பழ வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்த ஆப்பிளின் விதையை சாப்பிட்டால் அவ்வளவுதான். ஏனெனில் இதில் உள்ள
அமிக்தாளின்(amygdalin) மிகவும் விஷ தன்மை வாய்ந்த சைனைடை (cyanide) உற்பத்தி செய்யும். இதனால் வாந்தி, மயக்கம், அதிக ரத்த அழுத்தம், சிறுநீரக
கோளாறுகள் மற்றும் இறப்பு கூட வரலாம். சிலவேளை உடனே கோமாவுக்கு செல்ல நேரிடும்.

பாதாம் : பொதுவாக பாதாமில் 2 வகை உண்டு. இனிப்பு சுவை கொண்ட பாதாம் மற்றும் கசப்பு சுவை கொண்ட காட்டு பாதாம். இந்த கசப்பு சுவை உள்ள பாதாமில் ஹைட்ரஜன், சைனட் (hydrogen cyanide) அதிகம் உள்ளது. 7 முதல் 10 கசப்பு தன்மையுள்ள பாதாம்களை குழந்தைகள் உண்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடும். எனவே வாங்கும் போது நல்ல பாதாமை வாங்குங்கள்.