நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த காரணத்தினால் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா வளர்ச்சி உச்சியை தொட்டது.
மேலும் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் தான் என கூறப்படுகிறது. ரஜினியை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மாஸ் கலந்த படங்களில் அடிப்பது வழக்கம்.
அந்த படங்களில் எப்போதும் ஆக்சன், காமெடி போன்றவை அதிகம் இருப்பதால் அந்த படங்கள் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன இதனால் நல்லதொரு வரவேற்பு பெறுவதோடு வசூலிலும் அடித்து நொறுக்குகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை உள்ளது அதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள டான் படமும் வருகின்ற மே 13ம் தேதி உலக அளவில் ரிலீசாக இருக்கிறது இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முதல் நாள் மட்டுமே கோடிக்கணக்கில் வசூல் செய்த படம் எது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவான சீமராஜா திரைப்படம் மட்டும் தான் முதல் நாளில் மிகப்பெரிய அளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படம் முதல் நாளில் மட்டுமே சுமார் 4 கோடி வசூல் அள்ளியதாம் அதனை தொடர்ந்து வேற எந்த படமும் இப்படி ஒரு வசூலை முதல் நாளில் சிவகார்த்திகேயன் படங்கள் பெற்ற தரவில்லையாம்.