நயன்தாராவுக்கு நான் போட்டி இல்லை.. ஆனா இந்த கதாபாத்திரம் பெருசா பேசப்பட்டது – சொல்லி அடித்த சமந்தா

Samantha : தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் சுமாராக ஓடியது இதிலிருந்து மீண்டு வர நடிகை சமந்தா விஜய் தேவர கொண்டவுடன் கைகோர்த்து “குஷி” திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வெகு விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் சமந்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அண்மையில் கூட நீயூயார்க் நகரில் இவர் கிளாமர் உடையில் வந்த புகைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் குஷி படத்தின் ப்ரோமோஷனலுக்காக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்படி சமிபத்தில் பேட்டி ஒன்றில் இவர் பேசியது வைரலாகி வருகிறது நான் பொதுவாக நடிக்கும் போது எந்த படம் என்றெல்லாம் என்னுடைய ரோல் எப்படி பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த அளவிற்கு முக்கியத்துவமாக இருக்கும் என்பதை யோசித்து தான் நடிப்பேன். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட எல்லோரும் நயனுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்குன்னு சொன்னாங்க..

ஆனால் கஜிதா  ரோல் அதிக அளவு பேசப்பட்டது. நடிகை நயனுடன் சேர்ந்து பணிபுரியும் பொழுது அது ஒரு வித அனுபவத்தை கொடுத்தது நயன்தாரா ஒரு அற்புதமான திறமையான நடிகை இருந்தாலும் கஜிதா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு சொல்ல முடியாத வகையில் அமைந்தது எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version