வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் இந்த நடிகை தான் முதலில் நடிக்க வேண்டும்.! இணையத்தில் வெளியான அதிரடி தகவல்.!

0

தமிழ் திரை உலகில் பல வருடமாக தனது திரைப்பயணத்தில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் தல அஜித் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றுவிட்டது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் தல அஜித் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என கடந்த சில நாட்களாகவே தகவல் வைரலாகி வருகிறது பொதுவாகவே அஜித் உடன் இணைந்து நடித்த பல நடிகைகளும் நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றுவார்கள் அந்த வகையில் பார்த்தால் அஜித்துடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் பணியாற்றியவர் தான் மீனா.

இவர் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே,வில்லன்,சிட்டிசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தல அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளியான திரைப்படம் தான் வாலி இந்த திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது.

அந்த அளவிற்கு படம் நன்றாக இருந்தது என ரசிகர்கள் பலரும் கூறினார்கள்.அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த சிம்ரன் அப்போது ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் இந்நிலையில் வாலி திரைப்படத்திலிருந்து புதிதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ajith6
ajith6

ஆம் வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் மீனா தான் நடித்து இருக்க வேண்டுமாம் ஆனால் மீனாவுக்கு அப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடித்து வந்ததால் அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்று அவரே இந்த தகவலை ஒரு பேட்டியில் கூறியதாக கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சிம்ரனுக்கு அந்த கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது ஆனால் மீனா நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.