நடிகர் ரஜினியா இது.? பள்ளி பருவத்தில் எப்படி இருக்கிறார் பாருங்கள் – அரிய புகைப்படம் இதோ.!

RAJINI
RAJINI

சூப்பர் ஸ்டார் என்றால் நம் நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த் தான். 80 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் மாஸ் கலந்த படங்களில் நடித்து தனது கேரியரை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகராக ரஜினி இப்பொழுதும் இருந்து வருகிறார். இவரது இடத்தைப் பிடிக்க அஜித், விஜய் அவர்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நிகராக நடிகர் ரஜினியும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கிறார். இதனால் அவரது மார்க்கெட் சரியாமல் இருக்கிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “அண்ணாத்த” திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. குறிப்பாக இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது இருப்பினும் ரஜினி ரேஞ்சுக்கு இந்த வசூல் கம்மி என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் அடுத்த படத்தை சிறப்பான முறையில் கொடுக்க இளம் இயக்குனருடன் கைகோர்த்து ஒரு பிரமாண்ட படத்தை கொடுக்க ரஜினியும் முயற்சி செய்து வருகிறார். ரஜினியின் 169 வது திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த படம் நிச்சயம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஏனென்றால் நெல்சன் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்து வந்துள்ளன. அந்த காரணத்தினால் 169 படம் மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியாகும் அதுபோல தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

RAJINI
RAJINI