இந்த நடிகர் வேண்டாம் லியோ படத்தில் இருந்து விஜயால் ஒதுக்கப்பட்ட நடிகர்.! பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என்று வருத்தப்படும் பிரபலம்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வீடியோ இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த படுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் லியோ படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், திரிஷா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனராஜ் அவர்கள் இந்த படம் ஆரம்பிக்கும் முன்பு பல நடிகர்களை சந்தித்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அப்படி கேட்கும்போது ஒரு நடிகரை மட்டும் இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் இடம் விஜய் அவர்கள் கண்டிஷன் போட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மலையாள நடிகர் பிரித்திவிராஜ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.

அனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது அதன் பிறகு நடிகர் விஷாலை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ஆனால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது என்று லத்தி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட கூறியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஷாலை லியோ படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் விஜய் அவர்கள் கண்டிஷன் போட்டு இருக்கிறார் எதற்காக என்றால் பொதுவாக அவர் நடிக்கும் படங்களில் சரியாக ஷூட்டிங்கிற்கு கலந்து கொள்ள மாட்டாராம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் லியோ படத்தில் அவரை நடிக்க வைக்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் அவர் நடிக்க வந்தால் எங்கு தாமதப்படுத்தி விடுவார் என்றும் அதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக நஷ்டம் ஏற்படும் என்றும் எண்ணி தான் நடிகர் விஷால் அவர்களை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை தான் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமும் லோகேஷ் கனகராஜ் இடம் கூறி இருக்கிறது இதனால் தான் விஷால் அவர்கள் லியோ படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment