விஷ்ணு விஷாலின் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் இந்த நடிகரா!! அப்ப இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான் …

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படத்திற்கு முன்பு விஷ்ணு விஷால் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் எந்த திரைப்படமும் இவருக்கு சொல்லுமளவிற்கு பிரபலத்தை தரவில்லை. ராட்சசன் திரைப்படம் தான் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இவர் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு முக்கியமாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அமைந்தது சைக்கோ திரில்லர் படமாக அமைந்த  இத்திரைப்படத்தை ராம்குமார் இயக்கியிருந்தார் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.

இவ்வாறு ஹிட் பெற்ற இத்திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பொதுவாக ஒரு மொழியில் வெளிவந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற விட்டால் அதனை மற்ற மொழியில் ரீமேக் செய்வது வழக்கம் அந்த வகையில் தமிழில் ஹிட் பெற்ற ராட்சசன் திரைப்படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்கள்.

akshai kumar
akshai kumar

அந்தவகையில் தெலுங்கு ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடித்திருந்த கேரக்டரில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் யார் விஷ்ணு விஷால் கேரக்டரில் நடிப்பார் என்று சரியாக எந்த முடிவும் வெளிவரவில்லை.

அதாவது முதலில் ஆயுஷ்மான் குரானா நடிப்பார் என்று கூறப்பட்டது இப்படிப்பட்ட நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ராட்சசன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  அதோடு இவரே இத்திரைப்படத்தினை தயாரிக்க உள்ளதாகவும், ரமேஷ் வர்மா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment