பிக் பாஸ் 5 சீசனில் இந்த நடிகர், நடிகைகளும் போட்டியாளர்காளக பங்குபெற போகிறார்கள்.? யார், யார் தெரியுமா.?

விஜய் டிவி புதுவிதமான சீரியலில் கலை மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது அதிலும் எதிர்பாராத அளவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து விட்டால் அதை சீசன் சீசனாக கொடுத்து வருவது விஜய் டிவியின் வழக்கம். இந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கையில் எடுத்தது இதை முதலில் சற்று தயக்கத்துடன் ஆரம்பித்தாலும் ஆரம்பத்திலேயே மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

கமல்ஹாசன் சூப்பராக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்ப்பை பெற்றது அதைத் தொடர்ந்து சீசன் சீசனாக தொகுத்து வழங்குகிறது நான்கு சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் அக்டோபர் 3ம் தேதி தொடங்க இருக்கிறது இதனால் இதில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருகின்றனர் என மக்கள் தற்போது வரை தேடிக் கொண்டு வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் ஒரு லிஸ்டை வெளியிட்டாலும் அதில் அதிகாரப்பூர்வமாக இல்லாததால் இன்று வரையிலும் பிக் பாஸ் வீட்டில் யார் தான்  உறுதியாக செல்லப் போகிறார் என்பது தெரியாமல் இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல நடிகர்கள் நடிகைகள் சிலர் பிக்பாஸ் வீட்டில் விளையாடப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை கௌசல்யா, நிழல் ரவி மற்றும் நடிகை பிரியாராமன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள போவதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் திடீரென கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இவர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரியங்கா, ஷகிலா மகள் மீலா, குக் வித் கோமாளி கனி போன்ற பலரும் ஏற்கனவே கூறப்பட்டது.

அவர்களுடன் இணைந்து இவர்களும் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் பிக் பாஸ் லான்ச் எபிசோடில் யாரெல்லாம் போக போகிறார்கள் என்பது கடைசி கட்டமாக தெரிந்து விடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment