மலைவாழ் சிறுமியை கடத்திச் 49 வயது மதபோதகர் செய்த செயல்.! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..

0

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது மலைவாழ் சிறுமியை 49 வயது மதபோதகர் கடத்தி ஒரு  மாதம் ஆகியும் போலீசில் சிக்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் நிலைமைதான் என்ன? மதபோதகர் சிக்குவாரா.?

மத போதனைக்காக சென்ற 49 வயதான ஜெயாராஜ் 13 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார், ஒரு மாதம் ஆகியும் இதுவரை தேட முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் 49 வயதான ஜெயராஜ்.

இவர் ஜவ்வாது மலையில் உள்ள மலை கிராமங்களில் கிறிஸ்துவ மத போதனையில் ஈடுபட்டவர். மதப் போதனை ஜெயராஜுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. தனிமையில் வசித்து வருகிறார்.

இவர் மலைவாழ் பகுதியில் குடியிருக்கும் மக்களின் சிறுமியருக்கு டியூஷன் நடத்தி வந்தார் அங்குதான் வெடித்தது பிரச்சனை. அந்த டியூஷனில் அவரிடம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார் 13 வயது சிறுமி.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி சிறுமியுடன் மதபோதகர் திடீரென மாயமானார்.  பல இடங்களில் சிறுமியின் பெற்றோர் தேடிப்பார்த்து கிடைக்காததால் ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் மதபோதகர் கடத்தி சென்றதாக தந்தையார் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு மாதமாகியும் ஜெயராஜ் என்பவரை இன்னும் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார், இந்த நிலையில் சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  அந்த மனு தற்பொழுது நிலைவையில் இருக்கிறது.  தனது மகளை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் மதபோதகர் என்ற பெயரில் சிறுமிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.