நாசுக்காக வெற்றிமாறனுக்கு போன் போட்ட தனுஷ்.! மீண்டு வருவாரா தனுஷ்…

dhanush
dhanush

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு திரைப்படம் தனுஷ் அவர்களுக்கு சரியான வெற்றியை பெற்று தரவில்லை. அதன் பிறகு தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இதில் திருச்சிற்றம்பலம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நமது தனுஷ் அவர்கள் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், தி கிரே மேன், ஆகிய திரைப்படங்கள் வெற்றியடையாததால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார் இந்த நிலையில் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்ம் அவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

மொத்தமாக தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாத நேரத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த சமயத்தில் தனுசுக்கு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் இடம் போன் செய்து கதையை சொல்ல முன் வந்தார் ஆனால் அவரால் சொல்ல முடியவில்லை அதன் பிறகு இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா இவர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு உடனே வெற்றி மாறனும் நடிக்கலாம் என கூறிவிட்டார் போல உடனே  தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.  திறமையான நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கும் போது படத்தின் கதையை கூட கேட்காமல் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நடிகர் தனுஷ்.

மேலும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். மேலும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள தாய் கிழவி பாடலும் ரசிகர்கள் மத்தியில் நால வரவேற்ப்பை பெற்றது.