அந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் தான் மாஸ்.. கமல் சுத்த வேஸ்ட்.. உலக நாயகனை பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் உலக நாயகன் கமலஹாசன். வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக கமல் நடித்து வருகிறார். இவரை போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  ஒரு படத்தை கொடுத்து வருகிறார்.

இருவருக்கும் இடையே சினிமா உலகில் போட்டிகள் நிலவினாலும் நிஜத்தில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சினிமாவையும் தாண்டி தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். குறிப்பாக தன்னை நம்பிவரும் இல்லாதவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும்  முடிந்த உதவிகளை செய்கிறார் அதுவும் பெரிய அளவில் பிரபலமடைகிறது.

ஆனால் நடிகர் கமல் யாருக்கும் ஒரு ரூபாய் கூட காசு கொடுக்க மாட்டார் யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பொய் என்பது தான் உண்மை.. நடிகர் கமல் தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவிகள் செய்வார் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.  சினிமாவில் மட்டுமல்ல வேறு துறையில் இருப்பவர்களுக்கும்..

நிறைய உதவிகள் செய்து இருக்கிறார். அப்படி நடிகர் பொன்னம்பலத்தின் கிட்னி பிரச்சனை வந்த போது முதலவதாக ஓடிப் போய் உதவி செய்தது கமல் தான். அடுத்ததாக தான் ரஜினி பண உதவி செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பிறகு பொன்னம்பலத்தின் குடும்ப செலவு அனைத்தையும் கமல் தான் பார்த்தார்.

மேலும் நடிகர் பொன்னம்பலத்தின் பிள்ளை படிப்பிற்கான செலவையும் கமல் ஏற்றுக்கொண்டார் இப்படி பலருக்கும் தெரியாமல் சைலண்டாக பல உதவிகளை அவர் செய்கிறார். கமல் செய்வது விளம்பரமாக இருக்காது ஆனால் ரஜினி எது செய்தாலும் அவருடைய மேனேஜர் மூலமாக செய்வதால் அது பெரிய அளவில் விளம்பரம் ஆகி விடுகிறது.

Leave a Comment