என்னோட படத்துல இந்த மாதிரி விஷயங்கள் இருக்கவே கூடாது..! விக்னேஷ் சிவனுக்கு கட்டளையிட்ட அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வென்றது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் தல அஜித் மிக பிரமாண்டமாக நடித்துக் கொண்டிருக்கிறாராம்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தையும் வினோத் அவர்கள் தான் இயக்குவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் அவர்கள் நயன்தாராவின் ஆசைக் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கான பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் கதையை தல அஜித் இடம் விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளாராம்.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிக அளவு இடம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய திரைப்படத்தில் அரசியல் தொடர்பான எந்த ஒரு விஷயங்களும் இருக்கக் கூடாது  என்பதில் தல அஜித் மிக குறிக்கோளாக இருப்பது மட்டுமில்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இந்த காட்சிகள் அனைத்தையும் மாற்றி விட வேண்டும் என கூறிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் எழுதிய கதையில் அரசியல் கட்சிகள் தான் மிக பிரம்மாண்டமாகவும் எளிதாகவும் இருக்கும் அந்த வகையில் அதை மாற்ற சொன்னதால் விக்னேஷ் சிவன் அப்செட்டில் உள்ளாராம்.

ajith-1
ajith-1

Leave a Comment