அதிர்ஷ்டம் கூரைய பிச்சிகிட்டு கொட்டும் என்பார்கள் அது இதுதானா.! மைக் செட் ஸ்ரீராமுக்கு அடுத்த ஜாக்பாட்

0
sriram
sriram

youtube சேனல் மூலம் பிரபலமான ஸ்ரீராம் தற்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். யூடியூபில் பல ரசிகர்களைக் கொண்ட இவர் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதால் அவருடைய ரசிகர்கள் ஸ்ரீராமிற்கு வாழ்த்துக்கள் கூரி வருகின்றனர்.

இயக்குனர் விவேக் இயக்கம் இந்த படத்தில் கதாநாயகனாக ஸ்ரீராம் நடிக்க உள்ளார் நேற்று இந்த படத்தின் படபிடிப்பு பூஜை உடன் தொடங்கியது அது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் ஒரு மிகப்பெரிய பிரமாண்ட விழாவாக தொடங்கிய படத்தின் பூஜை படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை சந்தானத்தின் மைத்துனன் அவர்கள் தயாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறிய நடிகர் சந்தானத்தை இந்தப் பட குழு நேரில் சென்று அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றது. அது மட்டுமல்லாமல் ஸ்ரீராம் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார் சந்தானம்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உருவாக உள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காமெடி திரைப்படமாக உறாக உள்ளது அதுமட்டுமல்லாமல் மைக் செட் ஸ்ரீராம் அவர்களுக்கு முதல் திரைப்படம் என்பதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டும் அல்லாமல் நடிகர் ஸ்ரீராம் அவர்களுக்கு அவர்களுடைய ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

மேலும் இது போன்ற நிறைய திரைப்படங்களில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் மைக் செட் என்ற youtube சேனல் மூலம் பிரபலமான ஸ்ரீராம் தற்போது முதன் முறையாக சினிமாவில் நடிக்க உள்ளார். இவர் மேலும் சினிமாவில் தனக்கான இடத்தை  பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக் டாக் youtube மூலம் பல பிரபலங்கள் சினிமாவில் அடி எடுத்து வைக்கும் நிலையில் தற்போது youtube மூலம் பிரபலமான ஸ்ரீராம் அவர்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என பட குழு தெரிவித்துள்ளது.