வாய்ப்பிற்காக தன்னை அஜெஸ்ட்மென்ட் பண்ண சொன்னாங்க.! உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பிரபல சீரியல் நடிகை…

0
serial-actress
serial-actress

இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது அதிலும் குறிப்பாக சாதாரணமான பெண்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கும் வெள்ளித்திரை நடிகைகளுக்கும் வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கும் பல்வேறு விதமாக பாலியல் தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை வாய்ப்பிற்காக தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார்கள் என்று ஓப்பனாக ஒரு பேட்டியில் பேசி வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெருசாக பேசப்பட்டு வருவது மட்டுமல்லாமல் பலரும் அந்த நபர் யார் என்றும் கேட்டு வருகிறார்கள்.

அதாவது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் கார்த்திக் ராஜிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஆர்த்திகா. இவர் இந்த சீரியலில் கருப்பான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கார்த்திகா தற்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அப்போதான் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த உண்மைகளையும் அவர் உடைத்துள்ளார். அப்போது நான்கு பெண்கலை பெற்றெடுத்த நான் மூன்றாவது மகளாக என் பெற்றோருக்கு பிறந்தேன் துணிச்சலான பெண்ணாக வளர்ந்ததால் குழந்தை பருவத்தில் இருந்து எனக்கு பாலியல் தொல்லை வந்ததே கிடையாது.

மேலும் சில பெண்கள் வாய்ப்பிற்காகவும் பணத்திற்காகவும் நிறைய அட்ஜஸ்மென்ட் செய்ய ஒப்புக் கொள்வார்கள் ஆனால் நான் அப்படி கிடையாது அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பே தேவையில்லை என்று கூறியிள்ளார். அப்படிதான் ஒரு பிரபலம் தன்னிடம் வந்து வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார் எனக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு அந்த வாய்ப்பே தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன் என்றும் அவர் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

இப்படி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆரம்பத்தில் முகத்தில் அடித்தது போல கூறிவிட்டால் எந்த ஒரு நபரும் தவறான எண்ணத்தில் நம்மமை பார்க்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.