என்னுடைய முதல் படத்திலேயே அப்படி நடிக்க சொன்னாங்க.. நான் அழுதேன் அப்பவும் விடல.? உண்மையை பகிர்ந்த மும்தாஜ்

படத்தின் கதைக்கு ஹீரோ, ஹீரோயின் எப்படி தேவையோ அதே போல கிளாமர் காட்சிகளும், கிளாமர் பாடல்களும் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது அந்த வகையில் பல்வேறு படங்களில் கிளாமராகவும், குத்தாட்டமும் ஆடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மும்தாஜ் இவர் முதலில்  டி ராஜேந்தர் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த “மோனிசா என் மோனோலிசா” ..

படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே தன்னுடைய கிளாமர் மற்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து சத்யராஜின் மலபார்,  ஸ்டார், ஏழுமலை, த்ரீ ரோசஸ், மகா நடிகன் என பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றிகளை அள்ளினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த மும்தாஜ்.

ஒரு கட்டதில் தமிழில் பட வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் தாவினார் அங்கு ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்த இவர் 2015க்கு பிறகு சினிமா உலகில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் என்ட்ரி கொடுத்தார்  91 நாட்கள் இருந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் தற்பொழுது மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் .

இந்த நிலையில் நடிகை மும்தாஜ் சமிபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது.. என்னுடைய முதல் படமான மோனிசா என் மோனலிசா படத்தில் நடிக்கும் போது என்னுடைய வயது 16. இந்த படத்தில்  நீச்சல் உடையில் நடிக்க முதலில் யோசித்து மேக்கப் ரூமுக்கு சென்று இரண்டு மணி நேரம் அழுது இருக்கிறார் இதை தெரிந்து கொண்ட படத்தில் இயக்குனர் டி ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ஆகிய இருவரும்..

மும்தாஜிடம் சென்று எதற்காக அழுகிறாய்? நீ ஒரு நடிகை இது சாதாரண விஷயம் தான் என சமாதானப்படுத்தினார்கள் அதோடு மற்றும் நிறுத்திக் கொள்ளாமல் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரையும் அனுப்பிவிட்டு டி ராஜேந்தர்,  அவரது மனைவி உஷா, படத்தின் கேமராமேன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இருந்து மும்தாஜ் நீச்சல் உடையில் வரும் சீனை ஷூட்டிங் செய்தார்களாம் அப்பொழுது தான் நடிகை மும்தாஜ்க்கு நிம்மதி வந்ததாம்.

Leave a Comment