சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததற்கு இவர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.! தோனி அதிரடி

0

ஐபிஎல் 14வது தொடர் இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது முதல் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் டாஸ் வென்ற பந்து பவுலிங்கை தேர்வு செய்யாதார் பண்ட். இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் அதன்பின் வந்த ஒவ்வொரு வீரர்களும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கின அதிலும் சுரேஷ் ரெய்னா அபாரமாக ஆடி சிக்சர்களை பறக்கவிட்டு 50 ரன்களை கடந்தார்.

அதன்பிறகு ராயுடு, சாம்கரன், ஜடேஜா ஆகியோர் தனது அதிரடியை காட்ட  ஒரு கட்டத்தில் ரன் ஏற மறுபக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின. கடைசியாக கேப்டன் தோனி வந்தார். இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார்.

சென்னை அணி ஒரு கட்டத்தில் 188 ரன்கள் எடுத்து அசத்தியது.

பெரிய ஸ்கோரை அடித்ததால் நிச்சயம் தோனியின் தலைமையிலான சென்னை அணி நிச்சயம் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் அவர்களது கனவை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தது டெல்லி கேப்பிடல் அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான்.

இருவரும் சேர்ந்து 120 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர் அதன்பிறகு வந்த ஒவ்வொருவரும் அதிரடி ஆட்டத்தை காட்ட 18 ஓவர்களில் டெல்லி கேப்பிடல் அணி வென்றது.

இது குறித்து பேசிய தோனி நாங்கள் எடுத்தவுடனேயே அதிரடியை காட்ட தொடங்கினோம் குறிப்பாக எதிர்அணிக்கு மிகப்பெரிய ஒரு இலக்கை செட் செய்ய வேண்டும் என அனைவரும் திட்டம் தீட்டி விளையாடினோம் ஆனால் குறிப்பிட்ட 188 ரன்கள் போதுமான தான் ஆனால் இதை விட 10, 20ரன்கள் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனால் எதிர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எங்களது பந்து வீச்சாளர்களின் பந்துகளை ஒவ்வொன்றும் பிடிங்கி அடித்தனர் ஆனால் ஆரம்பத்திலேயே திணறியது சிஎஸ்கே.

பந்துவீச்சாளர்கள் சரியாக பந்து விசாத்தே தோல்விக்கான முழு காரணம் எனவும் குறிப்பிட்டார் மேலும் இது போன்று அடுத்தடுத்த ஆட்டங்களில் நடைபெறாமல் இருக்க திட்டங்களை தீட்டி பவுலர்கள் செயல்படுவார்கள் என குறிப்பிட்டார்.