தனுஷின் அடுத்தடுத்த 9 படங்களை இயக்க போவது இவர்களா.! சந்தோஷத்தின் உச்சியில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது தொடர் ஹிட் படங்களை கொடுத்து பல தேசிய விருதுகளை கைப்பற்றிய தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி வருபவர் நடிகர் தனுஷ்.தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கமிருக்க கர்ணன் படத்தின் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த இளம்  இயக்குனர்கள் மற்றும் திறமைவாய்ந்த படைப்பாளிகளான வெற்றிமாறன் அவரது அண்ணன் செல்வராகவனுடன் அடுத்தடுத்து இணைய உள்ளதால் தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களை கொடுக்க தற்போது தனுஷ் முடிவெடுத்துள்ளார் .

அடுத்த மூன்று வருடங்களுக்கு தனுஷ் பல ஹிட் படங்களை கொடுத்த ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் கர்ணன் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் திடீரென தயாரிப்பாளரின் முடிவால் அந்த திரைப்படம் தற்போது OTT தளத்திற்கு மாறி உள்ளது.

இதற்கு அடுத்ததாக தனது 43வது திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகன் போன்ற பலர் நடிக்கின்றனர் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது மேலும் இந்த திரைப்படத்தை மித்ரன் ஜவஹர் என்பவர் இயக்கவுள்ளார்.

இதற்கிடையே அவர் பாலிவுட் படம் ஒன்றிலும் தற்போது நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார் இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து உடனே ஆயிரத்தில் ஒருவன் 2 என்ற படத்தை ரசிகர்களின் ஆணைக்கிணங்க தனுஷ் வைத்து அந்த திரைப்படத்தையும் செல்வராகவன் இயக்க முடிவெடுத்துள்ளார்.அடுத்தடுத்த டாப் இயக்குனர்களை வைத்து இயக்கி வந்த இவர் மீண்டும் இளம் இயக்குனரான ராக்கி படத்தை இயக்கிய அருண் மதேஸ்வரனுக்கு ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

அதன்பிறகு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த இரண்டு இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் அடுத்தடுத்து வெவ்வேறு கதைகளை கொண்ட படத்திலும் நடிக்க உள்ளாராம் இதனால் அடுத்தடுத்த ஹிட் படத்தை இயக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய பேசப்படுகிறது.

இதனால் அவரது மார்க்கெட் பல மடங்கு உயர்வதோடு தனது சம்பளத்தையும் அதிகரித்துக் கொள்ள இத்தகைய படங்கள் கைகொடுக்கும் எனவும் கணிக்கப் படுகிறது.

Leave a Comment

Exit mobile version