தமிழ், தெலுங்கு சினிமாவில் இந்த நடிகர்கள் தான் அழகு.? அதுல ஒரு ஹீரோ மேக்கப்பே போட தேவையில்லை.? ஸ்ருதிஹாசன் அதிரடி பேச்சு.

0

உலகநாயகன் கமலஹாசன் போலவே சினிமா உலகில் வெற்றியைக் கண்டு வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கால்தடம் பதித்து தற்போது சிறப்பாக பயணித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான கிராக் என்ற திரைப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ரவிதேஜா ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம்  வெளியாகி பட்டைய கிளப்பியதால் தற்போது தெலுங்கு சினிமா பக்கம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இப்படி இருக்க தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைகாட்டாமல் இருந்த அம்மணி.

தற்போது விஜய் சேதுபதியுடம் ஜோடி சேர்ந்து லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளனர். காதல் தோல்விகளால் சமீப காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது இவர் என்ட்ரி கொடுக்கும் வகையிலான படங்கள் என்பதால் தற்போது ஹிட் அடித்தால் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இப்படியிருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அழகான நடிகர்கள் யார் என்று கூறுங்கள் எனக் கேட்டனர் அதற்கு சற்றும் யோசிக்காத சுருதிஹாசன் எனக்கு தெலுங்கில் மகேஷ்பாபு தான் ரொம்ப அழகாக இருப்பார்.

தமிழில் எல்லோருக்கும் பிடித்த தெரிஞ்ச முகமான தல அஜித் தான். ஷூட்டிங் நேரத்தில் மூஞ்சை கழுவிக்கொண்டு மட்டுமே நடிக்கக் கூடியவர் அப்படி என்றால் அவர் எந்த அளவிற்கு அழகாக இருப்பார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.