இந்த மூன்று பழக்கம் இருந்தால் 60 வயதிற்கு மேல் உயிர் வாழ மாட்டீர்கள் ரஜினி.! பேசி மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

0
rajini
rajini

நம்பர் ஒன் பட்டத்தை பல வருடங்களாக தனது தோளில் சுமந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்தப் பட்டத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள இன்றும் அவர் படங்களில் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்த போதிலும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது அதேசமயம் இந்த படத்தில் மோகன்லால் சிவ ராஜ்குமார் போன்ற டாப் ஸ்டார்கள் நடிப்பது இந்த படத்திற்கு இன்னும் பிளஸ் ஆக அமைந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் பேட்டிகள் கொடுத்து வருகிறார் அப்படி ஒரு பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை குறித்தும் தன்னிடம் இருந்த கெட்ட பழக்கங்கள் குறித்தும் விலா வாரியாக பேசுகிறார். தன்னிடம் மூன்று கெட்ட பழக்கங்கள் இருந்தது.

சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, அசைவம் சாப்பிடுவது என கூறினார். இந்த மூன்றும் இருப்பவர்கள் 60 வயதுக்கு மேல் இருக்க மாட்டார்கள் அப்படியே இருந்தாலும் படுத்த படுக்கையாக இருப்பார் என கூறினார். சிகரெட், குடிபழக்கம் போன்றவற்றால் உடலில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்..

ஆனால் உலகில் அதிகம் அசைவம் தான் சாப்பிடுகிறார்கள் அவர்களெல்லாம் இறந்து விட்டார்களா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர் ரஜினி சிகரெட் மற்றும் குடிப்பழக்கத்தால் தான் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது அசைவம் சாப்பிட்டதால் ஏதாவது பிரச்சனை வந்துள்ளதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.