WT20 இறுதி போட்டியில் களம் காணும் இரு அணிகள் இதுதான் – அடித்து சொல்லும் பென் ஸ்டோக்ஸ்.! செம்ம கடுப்பான ரசிகர்கள்.

20 ஓவர் உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன அதில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் எந்த இரண்டு அணிகள் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தங்களுக்கு தெரிந்த நுணுக்கங்களை வைத்து இந்த அணிகள் இறுதிப் போட்டியில் நுழையும் என கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் சமீபகாலமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். அவர் தற்போது கூறியுள்ளது இறுதி போட்டியில் இந்த இரண்டு அணிகள் நுழையும் என கூறி உள்ளார் அவர் கூறிய அணிகள் எது தெரியுமா முழு விவரம் இதோ.  இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தும் என கூறி உள்ளார்.

ஏனென்றால் இந்த இரண்டு அணிகளும் தொடர்ந்து வெற்றியை ருசித்து வருகின்றனர் தோல்வியை இதுவரை தழுவாமல் சிறப்பாக விளையாடி வருவதால் கிட்டத்தட்ட  அந்த இரண்டு அணிகளும்  இறுதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளனர் நிச்சயம் அரையிறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் பிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியில் சந்திப்பார்கள் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

அந்த அளவிற்கு இந்த அணி பேட்டிங் பவுலிங் களும் சம பலத்துடன் இருக்கிறார் நிச்சயம் இந்த இரண்டு அணிகளும் களம் காண்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அடித்துக் கூறியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

Leave a Comment