மாஸ்டர் படத்தில் செய்த இரண்டு தவறு இதுதான்.? வளர்ந்து வரும் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ்  தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசதி வருகிறார். முதலில் “மாநகரம்” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதன் பிறகு கார்த்தியை வைத்து கைதி, விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார் இந்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் ..

அடித்த நிலையில் தற்பொழுது விஜய் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தின் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.  வெகு விரைவிலயே படப்பிடிப்பை முடித்துவிட்டு டப்பிங் பணிகளை நோக்கி நகரும் என கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ்  அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார் அதன்படி ஒரு பேட்டியில் மாஸ்டர் படத்தில் ஒரு சில தவறுகளை செய்துள்ளதாக அவரை வெளிப்படையாக கூறி உள்ளார் அதாவது மாஸ்டர் படத்தில் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு சின்ன கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டது.

அப்படி நடிக்க வைத்த கதாபாத்திரங்களில் மிகவும் பாதிக்கப்பட்டவர் சாந்தனு இவர் மாஸ்டர் படம் எடுக்கும் பொழுது சாந்தனுக்கு அதிகப்படியான காட்சிகள் எடுக்கப்பட்டது.  கிட்டத்தட்ட விஜய்யும், சாந்தனுவும் சேர்ந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள், காதலிக்கு தனியாக பாடல் காட்சிகள் இப்படி பல காட்சிகள் சாந்தனுவிற்காக எடுக்கப்பட்டது..

ஆனால் படம் வெளியாகும் பொழுது சாந்தனுவின் பெரும்பாலான காட்சிகள் குறைக்கப்பட்டன. படத்தை பார்த்த சாந்தனுக்கே இது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என கூறப்படுகிறது மேலும் ஆண்ட்ரியாவுக்கும் இதுபோன்று குறைந்த கதாபாத்திரம் இந்த இரண்டு பேரையும் நான் நல்லபடியாக எடுக்க நினைத்து மோசமாக எடுத்துவிட்டேன் எனக்கூறி சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Leave a Comment