ராஜா ராணி படத்தில் “ஹீரோ” கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த இரண்டுநடிகர்கள் இவர்கள் தான்.? பல வருடம் கழித்தும் வெளிவரும் உண்மை.

raja-rani
raja-rani

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டெண்ட் ஆக இருந்து பின் படிப்படியாக இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்தவர் இயக்குனர் அட்லி இவர் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி அட்லீ. ஹிந்தி பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார் அதுவும் முதல் படமே ஹிந்தி சினிமாவில் கிங்காங் என அழைக்கப்படும் டாப் நடிகர் ஷாருக்கானுடன் கைகோர்த்து இவர் ஒரு புதிய படத்தை எடுக்க இருக்கிறார் அந்த படத்தில் ஷாருக்கான் இரண்டை கதாபாத்திரம் மேலும் நயன்தாரா அவருக்கு ஜோடியாகநடிக்க முடிவு செய்தனர்.

இப்படி இருந்த நிலையில் திடீரென அவர் விலகியதை அடுத்து சமந்தாவை கமீட்செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த படமும் இயக்குனர் அட்லீக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என ரசிகர்கள் சொல்லிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இவர் தமிழில் முதலில் இயக்கிய ராஜா ராணி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தில் ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ஜெய் ஆகியோர்கள் ஹீரோவாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் ஆனால் உண்மையில் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறு இரு டாப் நடிகர்கள் என தெரியவந்துள்ளது.

அந்த கதாபாத்திரத்தில் முதலில் ஆர்யா கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், ஜெய் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான நானியும் தான் இருந்தனராம் ஆனால் இருவரும் சில காரணங்களால் வெளியேற பின் ஆர்யா மற்றும் ஜெய் கமீட் செய்யப்பட்டனர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.