இந்திய அணியில் என்னுடைய இடத்தை நிரப்ப தகுதியானவர்கள் இந்த மூன்று பேர் தான் – யுவ்ராஜ் சிங் கணிப்பு.

இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக சுமார் 17 வருடங்களாக வலம் வந்தவர் யுவராஜ்சிங். இடதுகை வீரரான யுவ்ராஜ் சிங் பேட்டிங்கில் அதிரடியை காட்டினாலும் மறுபக்கம் பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல்வேறுவிதமான வெற்றிகளை பெற்றுத் தந்தவர்.

இதுவரை இந்திய அணிக்காக 304 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் அதுதவிர T20 ஓவர் போட்டிகளில் 58 விளையாடி நிலையில் தனது ஓய்வை அறிவித்து இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.

ஒவ்வொரு டாப் நட்சத்திர வீரர்கள் வெளியேறும்போது அவரது இடத்தை பிடிக்க இளம் வீரர்களை தேர்வு செய்வது வழக்கம் அந்த வகையில் யுவராஜின் இடத்தை சமீபகாலமாக எவராலும் பிடிக்க முடியாமல் இருந்து வருகிறது காரணம் ஒரு ஆல்ரவுண்டர் ஜொலிப்பார்.

மேலும்  சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனது அதிரடியை காட்டுவதால் அவருக்கான இடத்தை இன்று வரையிலும் இந்திய அணியில் சரியான முறையில் நிரப்பப்பட முடியாமல் இருந்து வருகிறது. யுவராஜ் சிங் போன்ற ஒரு இடது கையில் வீரரை தேடி வருகிறது.

இந்த நிலையில் யுவராஜ் சிங் இந்திய அணியில் எனது இடத்தை நிரப்ப இந்த மூன்று வீரர்கள் மட்டுமே முடியும் என சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார். அவர் கூறியது : என்னை பொருத்தவரை இந்த மூன்று வீரர்கள் நிச்சயம் எனது இடத்தை நிரப்புவார்கள் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.

அவர் கூறியது ரிஷப் பண்ட் ஹர்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய மூவரை தான் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் மிடில் ஆடரில் இறங்கி  பந்தை நாலா பக்கமும் அடித்து நொறுக்குவது அவரது ஸ்டைல். நானும் தோனியின் விளையாடும் பொழுது இடது வலது கை பேட்ஸ்மேன்கள் அதுபோல ரிஷப் பண்ட், பாண்டியா ஆகியோர்களால் எந்தவொரு வெற்றியையும் தீர்மானிக்க முடியும்.

இவர்கள் இருவரும் இடது வலது கையை வீரர்களாக திகழ்வதால் இந்திய அணியில் ஒவ்வொரு அணிகளுடன் போட்டியிலும் வெற்றியை இவர்கள் பெற்று தருவார்கள் என குறிப்பிட்டு உள்ளார். என்னை பொருத்தவரை ஜடேஜா பாண்டியா,ரிஷப் பண்ட் ஆகிய மூவருமே தனது இடத்தை நிரப்ப கூடியவர்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

Leave a Comment