சின்னத்திரையில் இருந்து அடுத்ததாக உருவாக போகும் ரியல் ஜோடிகள் இவர்கள்தான்.! நடிகை வெளியிட்ட போட்டோ இதோ..

தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் ஏராளமான பிரபலங்கள் தங்களுடன் பணிபுரிபவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள் அந்த வகையில் சன் டிவியில் பல எபிசோடுகளை கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் சந்திரலேகா. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா தனது காதல் திருமணம் குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியாக சன் டிவி இருந்து வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சந்திரலேகா.

இந்த சீரியலில் கதாநாயகியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்வேதா. இவருடைய  நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது மேலும் இவர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

சொல்லப்போனால் விஜய்யின் திரைப்படம் ஒன்றில் அவருடைய தங்கையாக கூட நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் விரைவில் மற்றொரு புதிய சீரியலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரசிகர்கள்  இவரை விரைவில் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என விரும்பி வருகிறார்கள்.

swetha
swetha

இப்படிப்பட்ட நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதாவது தன்னுடைய காதலரின் முகத்தை காட்டாமல் தன்னுடைய இதயத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறியிருந்த நிலையில் தற்போது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் திருமண நாளையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

அதாவது இவர் திருமணம் செய்து கொல்ல போகும் நபர் வேறு யாருமில்லை சின்னத்திரை நடிகர் மால்மருகா என்பவர் தான் மேலும் இவர்களுக்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 4ம் தேதி அன்று திருமணம் நடைபெற இருக்கிறது அது குறித்து தன்னுடைய வருங்கால கணவருடன் நடத்திய போட்டோ ஷூட்டை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a Comment