நியூசிலாந்துக்கு அணிக்கு எதிராக விளையாட போகும் இந்திய அணி வீரர்கள் இவர்கள்தான் – கேப்டன் ரோகித்.! துணை கேப்டன் யார் தெரியுமா.?

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்திய அணியின் கேப்டனாக இதுவரை செயல்பட்டு வந்த வீராட்கோலி தற்போதைய விலகியதை அடுத்து அந்த இடம் காலியாக இருந்தது தற்போது அந்த இடத்திற்கு சரியான ஒரு வீரரை கேப்டனாக போட்டு உள்ளது.

அந்த வீரர் வேறு யாருமல்ல ரோஹித் ஷர்மா தான். அடுத்த கேப்டன், கேஎல் ராகுல் துணை கேப்டன்னாக நியமித்துள்ளது பிசிசிஐ மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக இதுவரை இருந்து வந்துள்ள ரவி சாஸ்திரியின் ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தற்போது புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் தடுப்பு சுவர் என்றழைக்கப்படும்.

கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக மேற்கொள்வார் என தெரியவருகிறது. 20 ஓவர் உலக கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய அணி வருகின்ற 17 ம் தேதி நியூசிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. இதில் இந்திய அணியில் தேர்வு செய்ய பட்டுயுள்ளனர் என்பதை பற்றி தற்போது அறிவித்துள்ளது.

விராட் கோலி இந்த போட்டிகளில் களமிறங காட்டமாட்டார் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.  நியூசிலாந்து எதிரான தொடரில் இந்தியா யார் யாருடன் களமிறங்கும் என்பதை தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

கேப்டன் ரோகித், வைஸ் கேப்டன் கேஎல் ராகுல், கிஷன், சூர்யகுமார் யாதவ், ருத்ராஜ் கெய்க்வாட்  அஸ்வின், முகமது சிராஜ், ஹர்ஷா பட்டேல், வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல், ஆவேஸ் கான், புவனேஸ்வர் குமார் ஆகியோர்கள் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த வீரர்கள் எல்லாம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment