எனக்கு இவர்கள்தான் முக்கியம், வளர்த்துவிட்ட தனுஷை தூக்கியெறிந்த அனிருத்.! கடைசியில் ஏமாந்தது ரசிகர்கள்தான்…

dhanush-anirudh
dhanush-anirudh

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் அனிருத் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது தனுஷ் தான் தொடர்ந்து தனது மூன்று படங்களில் அனிருத் தான் இசையமைத்தார் அதுமட்டுமல்லாமல் இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது உள்ள முன்னணி நடிகர்களாக இருந்தாலும் சரி  தற்போது வெளியாகும் திரைப்படங்களாக இருந்தாலும் சரி அனிருத் இசையில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தனுசுக்கும் அனிருத்விக்கும் இடையே ஆன நெருக்கம் சிறிது காலத்தில் மோதலாகியது.

இவர்கள் இருவரும் எந்த ஒரு படத்திற்காகவும் கூட்டணி வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இவர்களது கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அனைத்து விஷயத்தையும் மறந்து மறுபடியும் இவர்கள் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நேரத்தில் தற்போது மறுபடியும் இவர்களுடைய நட்பு பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது ஆனால் இதற்கு இது காரணம் இல்லை என கூறப்படுகிறது.

அதாவது தனுஷ் அவர்கள் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் அவர்கள் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார் தனுஷ் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியானது.

தன்னுடைய ஐம்பதாவது படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தனுஷ் அவர்கள் மிகத் தீவிரமாக வேலை செய்து வருகிறாராம் இந்த நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால் தற்போது அனிருத் பல திரைப்படங்களில் பிசியாக இருந்து வருவதால் அவரால் தனுஷ் படத்திற்கு இசையமைக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.