வில்லன் வேடத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்கள் தானாம்.? இணையத்தில் வெளியான புதிய தகவல் இதோ.

0

தமிழ் திரையுலகில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நயன்தாரா இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தை தொடர்ந்து பல பிரபலங்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து வந்தார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்ததன் மூலம் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்துவிட்டது மேலும் இவர் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார் இவரது திரைப்பயணத்தில் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் இமைக்கா நொடிகள்.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் நயன்தாராவுக்கு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் பிரபலம் அனுராக் கஷ்யப் நடிப்பு ரசிகர்களால் தற்போது வரை பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானது பிரபுதேவா அவர்கள் மற்றும் கௌதம் மேனன்  தானாம் ஆனால் இவர்களால் நடிக்க முடியாமல் ஒரு சில காரணங்கள் குறித்து அவர் நடித்துள்ளதாக இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nayanthara2
nayanthara2

மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இவர் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.